நடைமேடையில் உறங்கிய முதியவரை தாக்கிய ரயில்வே போலீஸ்....

81பார்த்தது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைமேடையில் தமிழ்ச்செல்வன் வயது 57 என்கிற முதியவர் சுமார் மூன்று மாதங்களாக தங்கி இருப்பதாக கூறப்படுகிறது

இதே போல் இரவு உணவு அருந்திவிட்டு நடை மேடையில் படுத்து உறங்கி உள்ளார்.

அவ்வப்போது திடீரென வந்த ரயில்வே போலீசார் அவர் வைத்திருந்த லத்தியால் அந்த முதியவரை தலையில் அடித்து ஒறுமையில் பேசி எழுந்து போ என்று சரமாரியாக அடித்துள்ளார்

போலீசார் அடித்ததில் அந்த முதியவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது அதேபோல அங்கங்கே உடம்பில் வீக்கம் ஏற்பட்டு கையில் அடிபட்டுள்ளது உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த ரயில் பயணிகள் காவலரை சூழ்ந்து கொண்டு எதற்காக அந்த முதியவரை இப்படி அடித்தீர்கள் என்று கேள்வி கேட்டனர்

உடனடியாக அனைவரையும் தள்ளிவிட்டு அந்த காவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த காட்சியை அங்கிருந்த ரயில் பயணி ஒருவர் பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார் அந்த காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

செங்கல்பட்டில் நடை மேடையில் உறங்கிய முதியவரை லத்தியால் தாக்கிய போலீசாரின் இந்த செயலால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி