செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிக்கர் அரசு மருத்துவமனை மருத்துவக்
கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்து வரும் மாணவியை கடந்த 8-ஆம் தேதியன்று ஆர்ஜிக்கர் கல்லூரி செமினார் ஹாலில் வைத்து அந்த மாணவியை கட்டாய பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
இந்த கொலையில் கொல்கத்தா போலீசார் இதுவரை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை எனவும், இளம்பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை, அதிலும் மக்களின் உயிரை காப்பாற்றக்கூடிய மருத்துவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.