கடமலைப்புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால தத்தாத்ரேயர் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கடமலைப்புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால தத்தாத்ரேயர் கோவிலில் நவராத்திரி பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் நவராத்திரி பெருவிழா கடந்த 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு திருசக்தி ஹோமமும், குங்கும அர்ச்சனையும், தூப தீபாரதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜைகள் பங்கேற்றனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.