செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக அதிமுகவின் ஆற்றல் மிக்க செயல்பாடுகளுடன் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் அவரது திருஉருவ படத்திறப்பு நிகழ்ச்சி இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் நிலையில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் நேரில் பங்கேற்று அவரது திரு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதில் மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், முன்னாள் அமைச்சர் சின்னய்யா, சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் தண்டரை மனோகரன், தனபால், கணிதா சம்பத், பூவராக மூர்த்தி, மற்றும் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் உடன் இருந்து வருகின்றனர்.