தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வழக்கமாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து இன்று கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை எதிரொலியாக சென்னையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றிருந்தனர். குறிப்பாக கார், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், ஆட்டோ, வேன், இருசக்கர வாகனங்களில் சென்றிருந்தனர்.
இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து நாளை முதல் வேலை நாள் என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர துவங்கி உள்ளனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர்.