சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஓவியப்போட்டி

55பார்த்தது
கல்பாக்கம் வாசகர் வட்டம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டி ஓவியத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில் இயங்கி வரும் கல்பாக்கம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்பாக்கம் சுற்றுப்புற அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் கல்பாக்கம் நகரியத்தில் இயங்கும் அணு ஆற்றல் மத்திய பள்ளி 1, 2, கேந்திர வித்யாலயா பள்ளி 1, 2 என 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி நடைபெற்றது கல்பாக்கம் வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஸ்ரீகுமார் ஓவிய போட்டியை துவக்கி வைத்தார் இதில் தேசிய மூவர்ண கொடியினை வரைந்தும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தேச தலைவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்திய வாறு மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்தனர் சிறப்பான ஓவியத்தை வரைந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து வருகின்ற 18 ஆம் தேதி வாசகர் வட்ட நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது, நிகழ்ச்சியில் வாயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிங் உசேன் தமிழ் ஆர்வலர்கள் பன்னீர்செல்வம் உதயா ஆதிமூலம் பேராசிரியை கீதாலட்சுமி ஆசிரியர்கள் பத்மபிரபு சரவணன் சமூக ஆர்வலர் ஆனந்த் நூலகர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி