

மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மதுராந்தகம் கனரக வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை பெருநகர் லாரி உரிமையாளர் சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் மதுராந்தகம் காவல்துறை ஆய்வாளர் பரசுராமன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.