செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் கடந்த 1 ஆம் தேதி அவரது மனைவி சுகந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் காயாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது விபத்தில் சிக்கி மூவரும் பலியாயினர் ஹரிதாஸின் இளைய மகன் ஜோ டேனியல் மட்டும் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது விபத்தில் பலியான குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி அமைச்சர் அன்பரசன் மற்றும் முதலமைச்சரின் தனி செயலரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் எனவும் காயம் அடைந்த சிறுவனின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் அதனை வரவேற்று இன்றைய தினம் திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து சிறுவனிடம் நலம் விசாரித்தார் சிறுவனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார் மேற்கொண்டு சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை தேவை என்றால் கேளுங்கள் அதற்கான ஏற்பாட்டை செய்து தருகிறேன் என்றவர் சிறுவனிடம் நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.