ஆப்பூரில் 35சவரன் தங்க நகை 1, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

66பார்த்தது
சிங்கபெருமாள் கோயில் அடுத்த ஆப்பூரில் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதே 35சவரன் தங்க நகை , 1, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆப்பூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்வன் 36 ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சிந்து மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள்எப்போதும் போல நேற்றிரவு சாப்பிட்ட பிறகு தூங்க சென்றுவிட்டனர்.

குடும்பத்தோடு செல்வன் பக்கத்து அறையில் தூங்க சென்றுவிட்டனர். அப்போது பக்கத்து அறை மற்றும் வாசல் கதவுகள் உடைக்கப்
பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிந்து தனது கணவர் செல்வனிடம் கூறியதும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்ததால் பீரோவின் உள்ளே பார்த்த போது 35சவரன் தங்க நகைகள் மற்றும் 1லட்சத்து50ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் என கொள்ளை போனது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து பாலூர் காவல்
நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே சர்வசாதாரணமாக திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி