திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக இளைஞரணி நடத்திய மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி நடத்திய இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் திருப்போரூர் அடுத்த வெங்கூர் பகுதியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா, கழக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ மற்றும் கழக இளம் பேச்சாளர் மண்ணிவாக்கம் ஶ்ரீலேகா ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கண்டன உரையாற்றினர் நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா இந்தி தினிப்பு மற்றும் நிதி பகிர்வு குறித்து புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தார், தொடர்ந்து கழக துணை அமைப்பாளர் தாயகம் கவி இளம் பேச்சாளர் ஶ்ரீலேகா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.