திருப்போரூர் அடுத்த காயார் பகுதியில் நானோ கார் இருசக்கர வாகனம் மீது மோதி மூவர் பலி காயார் போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த காயார் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காயாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து காயார் நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாள்வரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஹரிதாஸ் மற்றும் அவரது மகன் லியோடனியல் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் ஹரிதாசின் மனைவி சுகந்தி மற்றும் ஜோடேனியல் வயது 5 குழந்தைக்கு காயம் ஏற்பட்டு இருவரும் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுகந்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உயிரிழந்த ஹரிதாசின் மகன் ஜோ டேனியல் 5 வயது குழந்தைக்கு கேளம்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.