கேளம்பாக்கம் ஊராட்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

73பார்த்தது
தமிழக முழுவதும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை தொடர்ந்து பல்வேறு பல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் மற்றும் சுப்ரீம் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான எஸ் ஆர் எல் இதயவர்மன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் முகாமில் இரத்தஅழுத்தம் சர்க்கரை அளவு ஆக்சிஜன் குறைபாடு, கண் பரிசோதனை, இசிஜி எனப்படும் இதயமின் அலை வரைவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்புச்செழியன் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வென்பேடு ரமேஷ் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கரன் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி