

காஞ்சி: 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு (VIDEO)
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 13 பேர் வெளிநடப்பு. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 16 நபர்களில் 13 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே சலசலப்பு நிலவியது. AGMT ஆன்லைன் டெண்டர் முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டு திமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலை கட்டப்பஞ்சாயத்து செய்து ஒன்றிய கவுன்சிலர்களை மிரட்டி வருகிறார் எனக் கூறப்படுகின்றனர். இது தொடர்பாக அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் கூறுகையில் தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலை அராஜக போக்கை கண்டித்து அதிமுக மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.