உலக பெண்கள் தின விழா மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மரகதம்குமரவேல் கலந்து கொண்டு மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்
உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற புது வாழ்வு அறக்கட்டளை எட்டாம் ஆண்டு
உலக பெண்கள்
தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு மகளிருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர்
பேசிய போது புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் மகளிருக்கென பல்வேறு திட்டங்களை வழங்கி மகளிருக்கான சம உரிமையை வாங்கி கொடுத்தவர். புரட்சித்தலைவி அம்மா
தான் மற்றும் இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் முதியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் அதேபோல் கஞ்சா போதைப்பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து உள்ளது.
இந்த திமுக ஆட்சியில் வந்தவுடன் கொலை கொள்ளை நாளுக்கு நாள் அரங்கேறி வருதால் திமுக ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சொந்த செலவில் சேலை வழங்கினார்.