காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூபாய் 4034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.