சோழிங்கநல்லூர் - Sozhinganallur

செங்கல்பட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்தரங்கம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" தொடர்பாக கருத்தரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்துகொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வருகின்ற 2030 ஆம் ஆண்டுகளுக்கு மேல்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றோ ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போது நடைமுறைக்கு வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.  நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் செலவுகள் குறைக்கப்படும். அந்த செலவுகளின் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எனவே இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதற்கும் நபர்களிடம் இது குறித்து எடுத்துரைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా