கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சியில் எஸ் டி எஸ் பவுண்டேஷன் சார்பில் சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்த்துவர், இஸ்லாமியர்கள் என 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அரிசி மளிகை பொருட்கள் உள்ளடக்கிய ரம்ஜான் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது, நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த எஸ் டி எஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் ஆகியோரை சால்வை அணிவித்து இஸ்லாமிய அமைப்புகள் கௌரவித்தனர்.