கடலில் மிதந்த மர்ம பொருளை மீட்ட சதுரங்கபட்டினம் மீனவர்கள்

60பார்த்தது
கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடலில் மிதந்த மர்ம பொருளை மீட்டு வந்த சதுரங்கபட்டினம் மீனவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது ஜெட்டி கேட் என்று சொல்லப்படும் கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகே மீனவர் ஜெகன் உட்பட 4 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஏதோ மர்ம பொருள் மிதப்பதை பார்த்தவர்கள் அருகாமையில் சென்று அந்தப் பொருளை கையிரு மூலம் இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர் பிறகு சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் கடலோர காவல் படை போலீசார் சதுரங்கப்பட்டினம் போலீசார் என இருவரும் இணைந்து மர்ம பொருளை பரிசோதனை செய்தனர் இப்பொருள் குறித்து மீனவர்கள் கூறுகையில் இது சோலாரால் இயங்கக்கூடிய ஒரு ரேடார் கருவி என்றும் இதை தமிழகத்தில் பயன்படுத்துவது இல்லை என்றும் இப்பொருளை இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்துவதாக மீனவர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசாரும், கல்பாக்கம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அணுமின் நிலையம் அருகே மர்ம பொருள் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி