சோழிங்கநல்லூர் - Sozhinganallur

திருக்கச்சூரில் மனுநீதிநாள் முகாம்

திருக்கச்சூரில் மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 69 பயனாளிகளுக்கு, 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், நேற்று வழங்கப்பட்டன. சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், மனுநீதிநாள் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.  இந்த முகாமில், அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், சிங்கபெருமாள்கோவில் - ஆப்பூர் வரை சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா, சாலை மின்விளக்கு வசதி, கலைஞர் கனவு இல்ல வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 291 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உத்தரவிட்டார்.  அதன்பின், 34 பேருக்கு, 2.40 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட வழங்கல் துறை சார்பில், 25 பேருக்கு ரேஷன் கார்டு, கூட்டுறவுத்துறை சார்பில், ஆறு பேருக்கு விதவை கடன், வீட்டுக்கடன், மகளிர் உரிமைக் கடன், மகளிர் குழுவினருக்கு நேரடி கடன் என, மொத்தம் 28 லட்சம் ரூபாய் கடன் உதவி. வேளாண்மைத் துறை சார்பில், நான்கு பேருக்கு விதை, உரங்கள் ஆகியவற்றை, மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా