அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே வெளியம்பாக்கம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.