கல்வி சுற்றுலா சென்ற மாணவி மலையில் இருந்து விழுந்து காயம் - கதறி அழுகும் குழந்தையை பார்த்து மக்கள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்டு முருங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில், நேற்று, கல்வி சுற்றுலா செல்வதற்காக, 90 மாணவர்களை அழைத்துக் கொண்டு, தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில், வேலூர் மாவட்டம் தங்க கோவில், ரத்தனகிரி மலை பகுதிகளுக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
அதில், முருங்கையைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகள் மேகஸ்ரீ, மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி நேற்று, மலையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல், பெற்றோரிடமும் தகவல் தெரிவிக்காமல், அலட்சிய போக்குடன் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் அதனை மறைத்து, குழந்தையை இரவு 11: 30 மணியளவில் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுள்ளனர்.
குழந்தைக்கு தலை, கண் மற்றும் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது.
அலட்சியப் போக்குடன் செயல்பட்ட தலைமையாசிரியர் மீது கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
வலியுடன் துடிக்கும் குழந்தையை பார்ப்பவர்கள் கண்கலங்க வைக்கிறது.