வள்ளிபுரம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் திறப்பு விழா

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சியில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர்மு பாபு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 97. 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஐந்து வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, காஞ்சிபுரம் எம் பி செல்வம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர் கற்பகம் துறை சார்ந்த அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி