கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் - 6 பேர் பலி

77பார்த்தது
எகிப்து: செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிந்துபாத் என்ற நீர்மூழ்கிக் கப்பல், 44 பயணிகளுடன் பவளப்பாறைகளைப் பார்ப்பதற்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி