மதுரை: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் காவலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தையன்பட்டி டாஸ்மாக் மதுக்கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் காவலர் (40) முத்துக்குமார், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த ராஜாராம் என்பவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மதுரை மாவட்ட எஸ்பி மற்றும் உசிலம்பட்டி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.