தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.27) 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு, சேலத்தில் 101.12 டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் 102.2 டிகிரி, திருச்சியில் 100.22 டிகிரி, திருத்தணியில் 100.4 டிகிரி, தருமபுரி, மதுரையில் 100 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேலும், சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து, மீனம்பாக்கத்தில் 101.66 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.