செய்யூர் தொகுதியில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறப்பு

58பார்த்தது
செம்பூர், பச்சம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு பங்கேற்பு!


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பூர், பச்சம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதியில் விசிக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு அவர்கள் கலந்து கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
விவசாயிகளின் நலன் கருதி இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி