செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

66பார்த்தது
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மாவட்ட ஆட்சியரை சந்திக்க பொதுமக்கள் உள்ளே நுழைந்தபோது தடுக்க முயன்ற காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வயலூர், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதியதாக அமையுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடர்ந்து மனு அளிக்க வந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது

புதிய கல்பாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருந்த நிலையில் அவர்களை காவலர்கள் வெளியே தடுத்து நிறுத்தியதாக புகார்

காவலர்களை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றபோது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிற்கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் வாசல் முன்பு அமர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி