செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த நாலரை வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் உடலில் சில இடங்களில் காயம் இருந்ததைக்கண்ட பெற்றோர் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் குழந்தைக்கு யாரோ பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் குழந்தை மேல் சிகிச்சைக்கு சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறுமி படித்து வந்த பள்ளி வாகனத்தில் கீளினராக வேலை பார்த்து வந்த பாலூர் பகுதியை சேர்ந்த முருகன், 45. என்ற நபர் பள்ளி வாகனத்தில் வைத்து குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.