சூனாம்பேட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா

59பார்த்தது
சூனாம்பேடு கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி!


செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சூனாம்பேடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைத்து தர வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் சிற்றரசு, துணைச் செயலாளர் முரளி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்க்கரை அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி