
ஸ்ரீபெரும்புதூரில் போதை மாத்திரை விற்ற ஆறு பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரனேரி சந்திப்பு பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல், 21, கலையரசன், 18, கார்த்திகேயன், 21, ஜெகதீஷ், 19, திருவள்ளூர் மாவட்டம், உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், 19, ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த யஸ்வந், 22, ஆகிய ஆறு நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.