சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. புறநகர் மின்சார ரயில்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் ஏசி வசதி கொண்ட ரயில்கள் இயக்கினால் எந்த களைப்பும் இல்லாமல், எளிதாக பயணிக்க முடியும் என்ற கோரிக்கை பயணிகளிடம் இருந்து வந்தது. ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. மேலும், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் அமைக்கப்படும் என என சட்டசபையில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வலியுறுத்தலின்படி, ஏசி கோச்கள் கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. இதற்கான பணி முடிவடைந்து சோதனை ஓட்டம், வில்லிவாக்கம், அம்பத்தூர், அரக்கோணம் ஆகிய வழித்தடத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது வரும் நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு விரையில் ஏசி ரயில் பயணிகள் பயண்பாட்டிற்க்கு வரும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.