மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) 'கிராம சபைக் கூட்டம்' நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி 'நம்ம கிராம சபை' செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.