தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் செம்பூண்டி, கிளியாநகர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் ஜி. தம்பு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.