தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. கோடைகாலத்தை சமாளிப்பதற்கு கூடுதல் தேவை ஏற்படுகிறதோ அது டெண்டர் மூலமாக பெறப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எங்கேனும் ஓரிடத்தில் மின் பழுது ஏற்பட்டால், அதனை அதிமுகவும் பாஜகவும் குற்றச்சாட்டாக கருதி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என்று பார்க்கிறார்கள்" என பேட்டியளித்துள்ளார்.