ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் 'STR - 49' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 'சீதாராமம்' பட நடிகை மிர்ணாள் தாகூர் நடிக்கப் போகிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் இணைந்து சாய் பல்லவி, சந்தானம் ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது.