அதிமுக - பாஜக கூட்டணி? குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணிக்காக இபிஎஸ் இறங்கி வந்துவிட்டார் என்ற கேள்விக்கு அவர் எங்கங்க இறங்கி வந்தாரு? என சட்டென்று கோபமான செல்லூர் ராஜூ, "அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி" என்று தெரிவித்துள்ளார்.