ஐபிஎல் கொண்டுவந்துள்ள சூப்பர் விதி

80பார்த்தது
ஐபிஎல் கொண்டுவந்துள்ள சூப்பர் விதி
IPL தொடரில் சூப்பர் ஓவர்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் வழங்கப்படும் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம். போட்டி TIE ஆன 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்கும். அதுவும் TIE ஆகும் பட்சத்தில் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் தொடங்கும். நேரக் கட்டுப்பாட்டை பொறுத்து, எது கடைசி சூப்பர் ஓவராக இருக்கும் என கள நடுவர்கள் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி