அமெரிக்காவில் தனது நாயை விமானத்தில் ஏற்ற மறுத்ததால் அதை விமான நிலைய கழிவறையில் மூழ்கடித்துக் கொன்ற அலிசன் லாரன்ஸ் (57) என்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்த போலீசார் 3 மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் நாயை அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.