கருங்குழி பேரூராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 15 வது வார்டு கிழாண்டை காலனி பகுதியில் தமிழக முதலமைச்சர் அவர்களின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் தசரதன் திமுக பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.