செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே திமுக அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தமிழக முதல்வர்
மு. க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்த பொதுமக்கள் வருகை தந்த நிலையில் இங்கு தூய்மைப் பணியில் ஈடுபட தாம்பரம் மாநகராட்சியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை அங்கிருந்து குப்பை வண்டியில் அதிகாரிகள் அழைத்து வந்துள்ளார்.
அதேபோல் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு அவர்களை மீண்டும் அதே குப்பை வண்டியில் அமர வைத்து இங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்
அதிகாரிகளின் இந்த செயலுக்கு தூய்மை பணியாளர்கள் மனவேதனையுடனும் அதேபோல் முக
சுழிபுடணும் வாகனத்தில் பயணம் செய்தனர்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!!