திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பூத்நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

67பார்த்தது
திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பூத் கிளை நிர்வாகிகள் பரிசோதனை மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன் பங்கேற்பு.

தமிழகம் முழுவதும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் பூத் கிளை நிர்வாகிகளை சந்தித்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி ராகவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான சீனிவாசன் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பூத் முகவர்களுக்கான அடையாள அட்டையை பரிசோதித்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்து நிர்வாகிகளுக்கு ஆலோசனையினை வழங்கினர் நிகழ்ச்சியில் முள்ளிகொளத்தூர் அதிமுக நிர்வாகி சீனிவாசன் தேவராஜ் உட்பட அனைத்து அணி நிர்வாகிகள் மகளிரணி பொறுப்பாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி