காஞ்சியில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்

68பார்த்தது
காஞ்சியில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, சோமநாதபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தோர் மருத்துவ சேவைகளை பெற, தினமும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு நேரவிரயம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சோமநாதபுரம் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க, அப்பகுதியைச் சேர்ந்தோர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2023 - 24ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு, இரு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. 

தற்போது வரை துணை சுகாதார நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே, துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கூறியதாவது: சோமநாதபுரம் துணை சுகாதார நிலையத்தில், இன்னும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் துணை சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி