மதுராந்தகம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் பொதுக்கூட்டம்

52பார்த்தது
மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்



காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் பொன் சிவக்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலால்மணி ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பொதுமக்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி