புதுப்பட்டினம் பகுதியில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்தபோது செய்த 54 மக்கள் நல திட்ட சாதனைகள் உள்ளடக்கிய துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மாவட்ட அவை தலைவர் எம் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் நடைப்பெற்ற மக்கள் நல திட்ட சாதனைகள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே புதுப்பட்டினம் முக்கிய பஜார் வீதி வழியாக கழக நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், பாசறை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என 100 க்கும் மேற்ப்பட்டோர் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க ஆதரவு தாருங்கள் என கேட்டுகொண்டனர்.