செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்ணப்பட்டு கிராமத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் என்னும் தனியார் நிறுவனத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுமார் 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனத்தில், சோப்பு, ஹேர் டை மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து கோத்ரேஜ் நிறுவனத்தில் உற்பத்தியை துவங்கி வைத்து பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்.
இதில் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கோத்ரேஜ் நிறுவன வளாகத்திற்கு வருகை தந்து கோத்ரேஜ் நிறுவனத்தின் சிந்தால் சோப் தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்தார் அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் கோத்ரேஜ் தொழிற்சாலையை சுற்றி பார்த்து வருகிறார்.