சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்

76பார்த்தது
சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழகச் செயலாளர் ஏழுமலை தலைமையில் கீழ்மருவத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் ஈரோடு சத்தியவதி ஆகியோர் கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் புருஷோத்தமன், கீழ்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா உள்ளிட்ட அணிகளின் அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி