இன்று (மார்.30) பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை (மார்.31) ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆன் அருளப்பட்ட மாதமாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றாக நோன்பு இருப்பது வழக்கமாகும்.