கவுகாத்தியில் நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி சார்பில் நிதிஷ் ராணா அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 37, சஞ்சு சாம்சன் 20 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி சார்பில், கலீல் அகமது 2, நூர் அகமது 2, பதிரனா 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சென்னை அணி வெற்றி பெற 183 ரன்கள் தேவை.