திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குதுப்பனம் பட்டியில் இன்று காலை முதல் 3 காட்டெருமைகள் உலா வந்தன. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அய்யலூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் காட்டருமையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திசை மாறி வந்த காட்டெருமைகள் எங்கு செல்வது என்று தெரியாமல் குதுப்பனம்பட்டி, எலப்பாரப்பட்டி போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மிரண்டு ஓடுவதால் குடியிருப்பு வாசிகள் வாகன ஓட்டுகள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில் கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதிகளில் இந்த மூன்று காட்டெருமைகளும் முகாமிட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.
வனத்துறை ஊழியர்கள் கூறுகையில் மலைப்பட்டி வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்குள் காட்டெருமைகளை விரட்டிச் செல்வதாக தெரிவித்தனர்.
மேலும் ஒரு காட்டெருமை கம்பி வேலிகளில் மிரண்டு முட்டியதில் மூக்கில் காயம் பட்டு ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் உள்ளது. எனவே சமூக ஆர்வலர்கள் அந்த காட்டெருமைக்கு சிகிச்சை அளித்து வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.