ரஷ்ய அதிபரின் கார் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி

70பார்த்தது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புடின் பயன்படுத்தும் கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இது லிமோசின் என்ற சொகுசு கார் மாடலை சேர்ந்தது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.3 கோடி எனப்படுகிறது. நல்வாய்ப்பாக அந்த காரில் புடின் பயணிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: PeoplesUpdate

தொடர்புடைய செய்தி